50 ஓவர் உலகக் கோப்பைக்கு எந்தெந்த வீரர்களை விளையாட வைக்க வேண்டும் என்ற உத்தேச பட்டியலை தயாரித்த பிசிசிஐ

மும்பை: 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு 20 வீரர்களை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் அனைவரையும் வரும் ஒரு நாள் போட்டிகளில் சுழற்சி முறையில் பயன்படுத்த பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.   

50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்நிலையில் 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மும்பையில் இன்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அழைப்பின் பேரில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் விவிஎஸ் லட்சுமணன், ரோஜர் பின்னி, முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் முடிவில் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு எந்தெந்த வீரர்களை விளையாட வைக்க வேண்டும் என்ற உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் அனைவரையும் வரும் ஒரு நாள் போட்டிகளில் சுழற்சி முறையில் பயன்படுத்த பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: