ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு கிருஷ்ணகிரியில் பெரிய மாரியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டுக்களால் அம்மனுக்கு அலங்காரம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு, பெரிய மாரியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டுக்களால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

உலகம் முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு பிறப்பு வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருக்கோவில்கள், பேராலயங்கள் போன்றவற்றில் நள்ளிரவு பிரார்த்தனைகள், திருப்பலிகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

அந்த வகையில் கிருஷ்ணகிரியில் உள்ள  பெரிய மாரியம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் புத்தாண்டு முன்னிட்டு அம்மனுக்கு 6 லட்சம் ரூபாய் மதிப்பில் அம்மனுக்கு 20 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய், 500 ரூபாய், 2000 ரூபாய் நோட்டுகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புதிய ஆண்டில் உலக மக்கள் அமைதி வேண்டிய, ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் திகழவும், தங்கள் குடும்பங்களில் அனைத்து செல்வங்களும் செழிக்க அம்மனை வழிபட்டனர்.

இதைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது தொடர்ந்து இன்று நாள் முழுவதும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள், நடத்தப்பட உள்ளது.

Related Stories: