×

தமிழகம் முழுவதும் 45 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, இடமாற்றம்: உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 45 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும் பணியிடமாற்றம் செய்தும் உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.தமிழக உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக காவலர் பயிற்சி கல்லூரி ஐஜியாக இருந்த அருண் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு சிவில் சப்ளை கூடுதல் டிஜிபியாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

தமிழக ஜெரேஷன் மற்றும் விநியோக கார்ப்பரேஷன் லிமிடெட் விஜிலென்ஸ் ஐஜியாக இருந்த கல்பனா நாயக் பதவி உயர்வு வழங்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியாகவும், உள்நாட்டு பாதுகாப்பு நுண்ணறிவுப்பிரிவு ஐஜியாக இருந்த ஈஸ்வரமூர்த்தி பதவி உயர்வு வழங்கப்பட்டு ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் டிஜிபியாகவும், அயல் பணியில் புதுடில்லி நுண்ணறிவு பிரிவு இணை இயக்குநராக உள்ள அவி பிரகாஷ் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

தலைமை மண்டல  மற்றும் மத்திய விசாரணை இணை இயக்குநராக இருந்த ஐஜி வித்யா ஜெயந்த் குல்கர்னி கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றம் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி வன்னிய பெருமாள் தமிழ்நாடு ஜெரெஷன் மற்றும் விநியோக கார்ப்பரேஷன் லிமிடெட் விஜலென்ஸ் கூடுதல் டிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் சரக டிஐஜியாக இருந்த பிரவீன் குமார் அபினபு ஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு திருப்பூர் நகர கமிஷனராக அமர்த்தப்பட்டுள்ளார்.  சென்னை மாநகர தெற்கு மண்டல இணை கமிஷனராக இருந்த நரேந்திரன் நாயர் ஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு மதுரை நகர கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.  திண்டுக்கல் சரக டிஐஜியாக இருந்த ரூபேஷ் குமார் மீனா பதவி உயர்வு வழங்கப்பட்டு அமலாக்கப்பிரிவு ஐஜியாகவும், காஞ்சிபுரம் சரக டிஐஜியாக உள்ள சத்யபிரியா பதவி உயர்வு வழங்கப்பட்டு திருச்சி நகர கமிஷனராக அமர்த்தப்பட்டுள்ளார்.

அயல் பணியில் புதுடெல்லியில் சிபிஐயில் டிஐஜியாக உள்ள விஜயேந்திர எஸ்.பிதாரி ஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி நகர கமிஷனராக இருந்த அவினாஷ் குமார் தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் நிர்வாக பிரிவு ஐஜியாகவும், தமிழக காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் நிர்வாக பிரிவு ஐஜியாக இருந்த தமிழ்சந்திரன் தமிழக போலீஸ் பயிற்சி கல்லூரி ஐஜியாகவும்,  திருச்சி மத்திய மண்டல ஐஜியாக இருந்த சந்தோஷ் குமார் காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு ஐஜியாகவும், திருச்சி நகர கமிஷனராக இருந்த விஜயகுமார் மத்திய மண்டல ஐஜியாகவும், சென்னை மாநகர அண்ணாநகர் துணை கமிஷனராக இருந்த விஜயகுமார் பதவி உயர்வு வழங்கப்பட்டு கோவை சரக டிஐஜியாகவும், சென்னை மாநகர மயிலாப்பூர் துணை கமிஷனராக இருந்த திஷா மிட்டல் பதவி உயர்வு வழங்கப்பட்டு சென்னை மாநகர கிழக்கு இணை கமிஷனராக அமர்த்தப்பட்டுள்ளார்.

டிஜிபி அலுவலகம் தலைமையிட உதவி ஐஜியாக இருந்த துரை பதவி உயர்வு வழங்கப்பட்டு ராமநாதபுரம் சரக டிஐஜியாகவும், ஆவடி காவல் ஆணையரகத்தில் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த மகேஷ் பதவி உயர்வு வழங்கப்பட்டு  நுண்ணறிவு பிரிவு டிஐஜியாக அமர்த்தப்பட்டுள்ளார்.  திருப்பூர் நகர வடக்கு துணை கமிஷனராக இருந்த அபினவ் குமார் பதவி உயர்வு வழங்கப்பட்டு திண்டுக்கல் சரக டிஐஜியாகவும், தாம்பரம் ஆணையரகத்தில் சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக இருந்த சிபி சக்கரவர்த்தி  பதவி உயர்வு வழங்கப்பட்டு சென்னை மாநகர தெற்கு இணை கமிஷனராக அமர்த்தப்பட்டுள்ளார்.

சென்னை சிறப்பு பிரிவு சிபிசிஐடி-1 எஸ்பியாக இருந்த ஜியாவுல் ஹக் பதவி உயர்வு வழங்கப்பட்டு சிபிசிஐடி டிஜஜியாகவும், சென்னை தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் எஸ்பியாக இருந்த விஜயகுமார் பதவி உயர்வு வழங்கப்பட்டு ரயில்வே டிஐஜியாகவும், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியாக இருந்த பகலவன் பதவி உயர்வு வழங்கப்பட்டு காஞ்சிபுரம் சரக டிஐஜியாகவும், சென்னை காவல்துறை நிர்வாக பிரிவு உதவி ஐஜியாக இருந்த சாந்தி பதவி உயர்வு வழங்கப்பட்டு நிர்வாக பிரிவு டிஐஜியாக அமர்த்தப்பட்டுள்ளார்.

அதேபோல், ஆவடி தமிழ்நாடு சிறப்பு படை கமாண்டன்டாக இருந்த விஜயலட்சுமி பதவி உயர்வுக்கு வழங்கப்பட்டு சென்னை ஆயுதப்படை டிஐஜியாகவும், தாம்பரம் காவல் ஆணையரக தலைமையிடம் மற்றும் நிர்வாக பிரிவு துணை கமிஷனராக இருந்த மூர்த்தி பதவி உயர்வு வழங்கப்பட்டு தாம்பரம் காவல் ஆணையரக சட்டம்-ஒழுங்கு இணை கமிஷனராகவும், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக இருந்த ஜெயசந்திரன் பதவி உயர்வு வழங்கப்பட்டு தஞ்சை சரக டிஐஜியாக அமர்த்தப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட எஸ்பியாக இருந்த மனோகர் பதவி உயர்வு வழங்கப்பட்டு டிஜிபி அலுவலக தலைமையிட டிஐஜியாகவும், அயல் பணியில், கொச்சி தேசிய புலனாய்வு முகமை எஸ்பியாக உள்ள தர்மராஜன் ஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அயல் பணியில் புதுடெல்லி ஒன்றிய அமைச்சரவை செயலக பாதுகாப்பு பிரிவு எஸ்பியாக உள்ள சமந்த் ரோஹன் ராஜேந்திரா பதவி டிஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர மேற்கு மண்டல இணை கமிஷனராக இருந்த ராஜேஸ்வரி சேலம் சரக டிஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் சரக டிஐஜியாக உள்ள மயில்வாகனன் சென்னை மாநகர தெற்கு போக்குவரத்து இணை கமிஷனராகவும், சென்னை மாநகர தெற்கு போக்குவரத்து இணை கமிஷனராக இருந்த ராஜேந்திரன் திருநெல்வேலி நகர கமிஷனராகவும், சென்னை மாநகர ெபண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை கமிஷனரான சியாமளா தேவி பெரம்பலூர் மாவட்டம் எஸ்பியாகவும், பெரம்பலூர் மாவட்ட எஸ்பியாக இருந்த மணி தாம்பரம் கமிஷனர் அலுவலக தலைமையிட மற்றும் நிர்வாக பிரிவு துணை கமிஷனராகவும், மதுரை நகர வடக்கு துணை கமிஷனராக இருந்த மோகன்ராஜ்  கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பியாகவும், மதுரை நகர தெற்கு துணை கமிஷனராக இருந்த சீனிவாசபெருமாள் விருதுநகர் மாவட்ட எஸ்பியாகவும், மத்திய மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக இருந்த சாய் பிரனீத் மதுரை நகர தெற்கு துணை கமிஷனராகவும், சிவகங்கை மாவட்டம் எஸ்பியாக இருந்த ெசந்தில்குமார் திருச்சி ரயில்வே எஸ்பியாகவும், திருச்சி ரயில்வே எஸ்பியாக உள்ள அதிவீரபாண்டியன் தாம்பரம் மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராகவும், சென்னை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு சிஐடி எஸ்பியாக இருந்த ேராகித் நாதன் ராஜகோபால் சென்னை மாநகர மயிலாப்பூர் துணை கமிஷனராகவும்,  சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு-2  துணை கமிஷனராக இருந்த மீனா டிஜிபி அலுவலக தலைமையிட உதவி ஐஜியாகவும், சென்னை மாநகர தி.நகர் துணை கமிஷனராக இருந்த ஆதர்ஷ் பச்சேரா புதிதாக உருவாக்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமை பிரிவு எஸ்பியாகவும், ராமநாதபுரம் மாவட்டம் சைபர் க்ரைம் கூடுதல் எஸ்பி பாஸ்கரன் பதவி உயர்வு வழங்கப்பட்டு ஆவடி மாநகர சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராக அமர்த்தப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Home Secretary ,Panindra Reddy , Promotion, transfer of 45 IPS officers across Tamil Nadu: Home Secretary Panindra Reddy orders
× RELATED தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை...