×

கார் விபத்தில் சிக்கியது எப்படி?: ரிஷப் பன்ட் விளக்கம்

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட். 25 வயதான இவர் இந்த ஆண்டு பிசிசிஐயின் டெஸ்ட் சிறந்த பேட்ஸ்மேன் விருதையும் வென்று இருக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தாயாரை பார்ப்பதற்காக டெல்லியில் இருந்து காரில் சொந்த ஊரான உத்தரகாண்ட் செல்லும்போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

தற்பொழுது அவர் டெல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து பேசி உள்ள காவல்துறை, 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல அனுமதி இருக்கும் நெடுஞ்சாலையில் அவர் குறிப்பிட்ட வேகத்தில் தான் சரியான முறையில் வாகனத்தை இயக்கி இருக்கிறார். அவர் குடித்துவிட்டு வாகனத்தை இயக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளனர். அவர் அதிவேகமாகவோ அல்லது குடித்துவிட்டு வாகனத்தில் ஓட்டி இருந்தாலோ டெல்லியில் இருந்து அவரால் வாகனத்தை நல்ல முறையில் ஓட்டி வந்திருக்க முடியாது, அதை டெல்லியில் இருந்து விபத்து நடந்த இடம் வரை உள்ள சிசிடிவி காட்சிகள் உறுதி செய்கிறது என்றும் கூறி உள்ளனர்.

இதனிடையே ரிஷப் பண்ட்டை மருத்துவமனையில் சந்தித்து பேசிய டெல்லி மற்றும் டிஸ்ட்ரிக் கிரிக்கெட் அசோசியேஷன் டைரக்டர் சியாம் சர்மா ரிஷப் பன்ட் விபத்து எப்படி நடந்தது என்று கூறியதாக முக்கியமான கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறுகையில், பன்ட் தற்போது நலமாகவும் விரைவாக குணமாகி வருகிறார்.

பிசிசிஐ மருத்துவர்கள் மருத்துவமனை மருத்துவர்கள் உடன் தொடர்பில் உள்ளார்கள். பிசிசிஐ அவரை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை தொடர வேண்டுமா என்று யோசித்து வருகிறது. சாலையில் இருந்த ஒரு பள்ளத்தை சமாளிக்க வாகனத்தை திருப்பியதால் விபத்து நிகழ்ந்ததாக ரிஷப் பன்ட் கூறினார் என்றார்.

Tags : Rishabh Punt , How to get into a car accident?: Rishabh Punt explained
× RELATED பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்: கேப்டன் ரிஷப் பன்ட் பாராட்டு