×

சவுதி கிளப் அணியில் ரொனால்டோ ஒப்பந்தம்: ஆண்டுக்கு ரூ.1,770 கோடி!

ரியாத்: நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), சவுதி அரேபியாவின் அல் நஸர் கால்பந்து கிளப் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2003ல் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைட்டட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ரொனால்டோ, 2009ல் ரியல் மாட்ரிட், 2018ல் யுவென்டஸ் அணிகளுக்கு மாறினார். கடந்த ஆண்டு மீண்டும் மான்செஸ்டர் யுனைட்டட் அணியில் இணைந்த அவர், நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார்.

கத்தார் உலக கோப்பையில் எதிர்பார்த்த அளவுக்கு திறமையை வெளிப்படுத்தாவிட்டாலும், அவருக்கான மவுசு கொஞ்சமும் குறையவில்லை. உலகின் முன்னணி கிளப் அணிகள் ரொனால்டோவை (37 வயது) ஒப்பந்தம் செய்ய போட்டி போட்ட நிலையில், சவுதி அரேபியாவின் அல் நஸர் கிளப் அவரை இரண்டரை ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. ரொனால்டோவுக்கு, ஆண்டுக்கு ரூ.1,770 கோடி ஊதியமாக வழங்கப்பட உள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் முடிந்த பிறகு சவுதி அணியின் பயிற்சியாளராக அவர் செயல்பட உள்ளதாகவும்  தகவல் வெளியாகி உள்ளது.

Tags : Ronaldo ,Saudi , Saudi club team, Ronaldo deal,
× RELATED துபாயைத் தொடர்ந்து சவுதி அரேபியாவிலும் கன மழை!