ஜனவரி முழுவதும் தமிழ் நாட்டில் விழாக்கோலம் பெறும் வாய்ப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி..!!

சென்னை: ஜனவரி முழுவதும் தமிழ் நாட்டில் விழாக்கோலம் பெறும் வாய்ப்பு உள்ளது என செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். அப்போது பேசியதாவது தமிழர்களின் கலைகளை பறை சாற்றும் நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக கூறினார். இதில் ஏறு தழுவுதல், பன்னாட்டு புத்தக கண்காட்சி, சென்னை சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது எனவும் கூறினார். ஜனவரி 13 முதல் 17 வரை சென்னை சங்கமம் -நம்ம ஊர் திருவிழா நடைபெற உள்ளது எனவும் தெரிவித்தார்.

பின்னர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழா நடைபெறும். ஜனவரி.13ல் மாலை சென்னை சங்கமம் -நம்ம ஊர் திருவிழாவை தீவுத்திடலில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். கலை நிகழ்ச்சியுடன் உணவு திருவிழாவும் நடைபெறும் எனவும் எம்.பி கனிமொழி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். மேலும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என கூறினார்.

Related Stories: