×

துணை இல்லாத பெண்களின் விவரங்களை சேகரித்து வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆபாச செய்தி, படம் அனுப்பி ‘உறவு’க்கு அழைத்த 2 பேர் கைது

சென்னை: சமூக வலைதளங்களில்  துணை இல்லாத பெண்களின் விவரங்களை சேகரித்து, அவர்களது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாச செய்திகள் மற்றும் படங்களை அனுப்பி தவறான உறவுக்கு அழைத்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை வடபழனியை சேர்ந்தவர் ஜான்சி ராணி (பெயர் மாற்றம்). இவர், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், ‘எனது செல்போன் எண்ணுக்கு அடையாளம் தெரியாத ஒரு நபர், ஆபாசமாக பேசுவதாகவும், வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆபாசமான தகவல்கள் மற்றும் படங்கள் அனுப்பி தவறான உறவுக்கு அழைக்கிறார்’ என்று கூறியிருந்தார். இதையடுத்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்தனர்.

இந்நிலையில், செல்போன் வாட்ஸ்அப் மூலம் ஆபாச தகவல்கள் அனுப்பிய சேலத்தை சேர்ந்த மணிகண்டன் (எ) மணி (37), இவருக்கு உடந்தையாக இருந்த தியாகராய நகரை சேர்ந்த மதி (எ) மதியழகன் (35) ஆகிய 2 பேரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் மதியழகன், முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் துணை இல்லாத பெண்களின் விவரங்கள் மற்றும் செல்போன் விவரங்களை எடுத்து, வாட்ஸ்அப் மூலம் பெண்களுக்கு ஆபாச தகவல்கள் மற்றும் படங்கள் அனுப்பி தவறான உறவுக்கு அழைப்பதும் தெரிய வந்தது. கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



Tags : WhatsApp , 2 arrested for collecting details of unaccompanied women and sending obscene messages and pictures to WhatsApp numbers and inviting them for 'relationship'
× RELATED நெட் இல்லாமல் வாட்ஸ்அப்பில் தகவல்...