×

பெண்களுக்கான 2022-23 ஹாக்கி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் சார்பில் தென்இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையே நடைபெற்ற பெண்களுக்கான 2022-23  ஹாக்கி போட்டியில் வெற்றிப் பெற்ற அணிகளுக்கு பரிசுகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் சார்பில் தென்இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையே நடைபெற்ற  பெண்களுக்கான 2022-23  ஹாக்கி போட்டிகள் சென்னையில் உள்ள  மேயர்  ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்தில் 2022 டிசம்பர் 26 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டிகளில் 30 பல்கலைகழக அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டியில் மைசூர் பல்கலைக்கழகம், கர்நாடகம் (University of Mysore) முதலிடத்தையும், பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு (Bharathiyar University) இரண்டாம் இடத்தையும், கோழிக்கோடு பல்கலைக்கழகம், , கேரளா (University of Kerala) மூன்றாம் இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு (university of tamilnadu)  நான்காம் இடத்தையும் பெற்றனர்.

இந்த  போட்டிகளுக்குக்காண பரிசளிப்பு விழா இன்று (31. 12. 2022)  சென்னையில் உள்ள  மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளையும், காசோலைகளையும் வழங்கினார். முதல் பரிசு தொகையாக ரூ. 1- லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 50- ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 25- ஆயிரம், நான்காம் பரிசாக ரூ. 25-  ஆயிரம் வழங்கப்பட்டது.

 இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசியதாவது தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியானது விளையாட்டுத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது. தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டு போட்டிகள் உட்பட அனைத்து விதமான போட்டிகளிலும் தமிழ்நாட்டு விரர் வீராங்கனைகள் கலந்துகொள்ள ஏதுவாக தேவையான பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து விதமான உதவிகளையும் செய்யும்.

இந்த விழாவில் சட்டதுறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யமிஸ்ரா,  இ.ஆ.ப., தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர் சந்தோஷ் குமார், பதிவாளர் ரஞ்சித் உம்மன் ஆபிரஹாம், இந்தியன் ஆயில் கார்பொரேஷன் செயல் இயக்குநர் அசோகன், துணை பொதுமேலாளர் குமார், பாரத்இன்ஸ்டிடியூட் ஆப் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக தலைவர் சந்தீப் ஆனந்த், இந்திய ஹாக்கி சங்க பொருளாளர் சேகர், மனோகரன், அர்ஜுனா விருது பெற்ற வீரர் முஹமது ரியாஸ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Udhayanidhi Stalin , Girl, Hockey, Competition, Victory, Prize, Minister, Udayanidhi
× RELATED தமிழ்நாட்டு மாணவர்கள் படிக்கக்கூடாது...