×

சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில்  நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்
 உதயநிதி  ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.

சென்னை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் (Chennai District Masters Athletic Association) சார்பில்  சென்னை நேரு விளையாட்டு அரங்களில்  நடைபெற்ற தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு   இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (31.12.2022)  பரிசுகளை வழங்கினார்.

 30.12.2022 மற்றும் 31.12.2022 ஆகிய  இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த தடகளப் போட்டிகளில் 30வயதிற்க்கு மேற்பட்ட  500 தடகள வீரர்- வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இப்போட்டியில் 100மீ, 200மீ, 400மீ, 800மீ, 1000மீ, 1500மீ, 5000மீ மற்றும் 10000மீ ஒட்டப்பந்தயம், 80மீ, 100மீ, 300மீ மற்றும்  400மீ மும்முனை தாண்டுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போன்ற தடகளப்போட்டிகள் நடைபெற்றது.  
    
 இப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி இன்று நேரு விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி  ஸ்டாலின் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி தன்னுடைய பாரட்டுகளையும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். மேலும் தேசிய மற்றும் பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்ற மூத்த தடகள வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
    
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன், சென்னை மாவாட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் எம். செண்பக மூர்த்தி, செயலாளர் டி. ருக்மினிதேவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Minister ,Udhayanidhi Stalin ,Chennai District Senior Athletic Association , Minister Udayanidhi Stalin gave prizes to the winners of the competitions organized by Chennai District Senior Athletic Association
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...