பொங்கல் பரிசு வழங்குதல் தொடர்பாக ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு : தமிழக அரசு

சென்னை: பொங்கல் பரிசு வழங்குதல் தொடர்பாக ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பு கிடங்கில் நகர்வு செய்த தரமான பச்சரிசி, சக்கரையை விநியோகம் செய்ய வேண்டும், குறைபாடுகள் இருந்தால் விற்பனையாளர்களே முழு பொறுப்பு என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கரும்பின் தோகையை வெட்டாமல் முழு கரும்பையும் வழங்க வேண்டும். எந்த விதமான புகார்களுக்கும் இடமளிக்காமல் கரும்பு விநியோகம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

Related Stories: