×

மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழாவில் கோலாகலம்: பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த கரகாட்டம், பொய்க்கால் குதிரை மற்றும் நெருப்பு ஆட்டம்

சென்னை : சுற்றுலா துறை சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய நாட்டின் விழாவின் 8-ம் நாள் நிகழ்ச்சியில் கிராமிய நடனம் மற்றும் பாரத நாட்டியம் உள்ளிட்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் இந்திய நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம். தமிழ்நாடு அரசின் சுற்றுலா துறை சார்பில் நடத்தப்படும் இந்த விழா கடந்த வெள்ளி கிழமை தொடங்கியது.

வரும் ஜனவரி மாதம் 12-ம் தேதி வரை 20 நாட்கள் இந்த விழா நடைபெற உள்ளது. நேற்று நடந்த 8-ம் நாள் நிகழ்ச்சியில் காவடியாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம் மற்றும் பரதநாட்டியம் உள்ளிட்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாட்டிய நிகழ்ச்சியில் இடம்பெற்ற பெண் கலைஞர்களின் நெருப்பு நடனம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க செய்தது.

இதனிடையே மாமல்லபுரம் வந்திருந்த வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகள் நாட்டிய விழாவில் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு நாட்டிய விழா நிகழ்ச்சிகளை செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.  


Tags : Kolagalam ,Indian Dance Festival ,Mamallapuram ,Karakatam ,Poikal , Mamallapuram, Indian, Dance, Festival, Spectator, Performance
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...