×

திமுக மாணவர் அணி அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் நேர்காணல்: மாநில செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ அறிவிப்பு

சென்னை: திமுக மாணவர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நேர்காணல் வருகிற 5, 6ம் தேதிகளில் கோவையில் நடைபெறும் என்று மாநில செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ அறிவித்துள்ளார். திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தி.மு.க. மாணவர் அணியின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் பொறுப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, வரும் 5ம் தேதி (வியாழன்) மற்றும் 6 (வெள்ளி) ஆகிய நாட்களில், கோவையில் (இடம் பின்னர் அறிவிக்கப்படும்) நேர்காணல் நடைபெறும். 5ம் தேதி காலை 8 மணி முதல் 11.30 மணி வரை கோவை வடக்கு, கோவை தெற்கு, கோவை மாநகர் மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறும். மதியம் 12 மணி முதல் 1 மணி வரை கரூர் மாவட்டத்துக்கும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரை திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு மாவட்டங்களுக்கும், மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு மாவட்டத்திற்கும் நேர்காணல் நடைபெறும்.

6ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் 11.30 மணி வரை சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்திய மாவட்டத்துக்கும், மதியம் 12 மணி முதல் 1 மணி மணி வரை நீலகிரி மாவட்டத்துக்கும், மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை தர்மபுரி கிழக்கு, தர்மபுரி மேற்கு மாவட்டத்துக்கும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு மாவட்டத்துக்கும் நேர்காணல் நடைபெறும். மாணவர் அணி பொறுப்புகளுக்கு விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பப் படிவத்தின் நகல் மற்றும் உரிய சான்றுகளுடன், குறித்த நேரத்திற்கு வருகை புரிந்து, நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும்.

Tags : Dijagam ,State Secretary ,Avelarasan ,MLA , DMK Student Team Organizer Deputy Organizers Interview: State Secretary Ehilarasan MLA Notification
× RELATED மக்களவை தேர்தலில் படுதோல்வியை...