திருப்புத்தூர் நூலகத்தில் போட்டி தேர்வுக்கான புத்தகங்கள்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் பேரறிஞர் அண்ணா அரசு கிளை நூலகத்தில் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளன. இதை போட்டி தேர்வுக்கு தயாராவோர்  பயன்படுத்தி கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பேரறிஞர் அண்ணா கிளை நூலகத்தில், போட்டி தேர்வுக்கான புத்தகங்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறை சார்ந்த புத்தகங்கள், சட்ட வல்லுநர்கள் பயன்படுத்தும் சட்ட நூல்கள், செந்தமிழ் இலக்கிய நூல்கள், மருத்துவ நூல்கள், சிறுவர்கள் பயன்படுத்தும் வகையில் சிறுவர் பிரிவு மற்றும் குடிமைப்பணி பயிற்சி பிரிவு உள்ளிட்ட ஏராளமான புத்தகங்கள் வாங்கி வைக்கப்பட்டுள்ளன. போட்டி தேர்வுக்கு தயாராவோர், மாணவர்கள், பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என நூலகர் மகாலிங்க ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

Related Stories: