×

20 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: 20 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.  பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள்:

* ஊர்க்காவல் படை தலைமை கமாண்டண்ட் ஆக டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

* தலைமையக ஏ.டி.ஜி.பி.யாக உள்ள ஜி.வெங்கடராமனுக்கு கூடுதலாக காவல்துறை நிர்வாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

* சென்னை டி.ஜி.பி. அலுவலக ஐஜியாக டி.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

* பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரியாக ஆசியம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார்.

* வேலூர் சரக டிஐஜியாக ஐபிஎஸ் அதிகாரி எம்.எஸ்.முத்துசாமி  நியமிக்கப்பட்டுள்ளார்.

* கடலோர பாதுகாப்பு குழும ஐஜியாக சென்னையில் ஐபிஎஸ் அதிகாரி ஏ.கயல்விழி நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னையில் காவல்துறை தொழில்நுட்ப சேவைகள் பிரிவு டிஐஜியாக ஆர்.சின்னசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை பெருநகர காவல் பிரிவில் உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராக எம்.ராஜராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னை டிஜிபி அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு பிரிவு உதவி ஐ.ஜியாக இ.எஸ் உமா நியமிக்கப்பட்டுள்ளார்.

* சென்னையில் சிஐடி சிறப்பு பிரிவு எஸ்.பி.யாக அர.அருளரசு நியமிக்கப்பட்டுள்ளார்.

* தீயணைப்பு மற்றும் மீட்பு படை இயக்குநராக டிஜிபி ஆபாஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

* சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துறை ஐஜியாக எஸ்.பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

* தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.ஆர்.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

* தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக என்.ஸ்டிபன் ஜேசுபாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

* தருமபுரி மாவட்ட எஸ்.பி.யாக உள்ள கலைச்செல்வன் நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார்.

* நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

* தஞ்சை சிபிசிஐடி எஸ்.பி.யாக உள்ள முத்தரசி தஞ்சை மாவட்ட காவல் கண்காணீப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

* தஞ்சை எஸ்.பி.யாக உள்ள ரவுளி பிரியா கந்தபுனேனி சென்னையில் சிபிசிஐடி எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார்.

* ஆவடி காவல் ஆணையரகத்தில் போக்குவரத்து துணை ஆணையராக ஏ.ஜெயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார்.

* சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆர்.சிவக்குமார்  என 20 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : S.S. Government of Tamil Nadu , 20 IPS Tamilnadu government orders transfer of officers
× RELATED காவல் நிலையங்களில் கைதிகள்...