×

சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களில் 3500 சவரன் நகைகள் துணிகர மோசடி செய்த பெண்ணிடம் போலீஸ் விசாரணை

சீர்காழி: சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களில் பெண்களிடம் 3,500 சவரன் நகைகளை மோசடி செய்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 10 சவரன் நகை தந்தால் மாதம் ரூ.15,000 தருவதாக வாக்குறுதி அளித்து பலரிடம் நகைகளை பெற்று மோசடி செய்துள்ளனர். மயிலாடுதுறை அடுத்த சீனிவாசபுரம் நகரை சேர்ந்த பாத்திமா நாச்சியார் மீது 50-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர்.

சங்கிலி தொடர் முறையில் பல பெண்களிடம் நகைகளை பெற்று பாத்திமா நாச்சியார் மோசடி செய்தது அமபலமானது. பாத்திமா நாச்சியாருடன் சேர்ந்து புங்கநூரைச் சேர்ந்த பரக்த் நிஷா என்பவரும் மோசடி செய்ததாக குற்றசாட்டு வைத்துள்ளனர். சீர்காழி,மயிலாடுதுறை சுற்றியுள்ள பல்வேறு 500-க்கும் மேற்பட்டோரிடம் நகைகளை பெற்று மோசடி செய்துள்ளதாக குற்றசாட்டு வைத்துள்ளனர். புகாரை அடித்து பாத்திமா நாச்சியாரை சீர்காழி போலீஸ் கைது செய்தது. நகைகளை கொடுத்து ஏமாந்தவர்கள் சீர்காழி காவல் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு பெண்களிடம் நூதன முறையில் நகைகளை பெற்று மோசடி செய்துள்ளதாக புகார் அளித்தனர். 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக நகைகளை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  


Tags : Seerkhali ,Mayeladuthurai , Police interrogate woman who scammed 3500 Savaran jewels in towns including Sirkazhi, Mayiladuthurai
× RELATED நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...