மீஞ்சூர் அருகே ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா

பொன்னேரி: மீஞ்சூர் அருகே வடஸ்ரீரங்கம் என அழைக்கப்படும் தேவதானம் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்கநாதர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் 5 தலைகளை குடையாக விரித்தபடி உள்ள ஆதிசேஷன், தனது உடலை 3 மடிப்புகளுடன் கொண்ட கூடிய விரிப்பில் ரங்கநாதர் பள்ளி கொண்டது போல் வீற்றிருக்கிறார். இத்தகைய சிறப்புமிக்க ரங்கநாதர் கோயிலில் வரும் 2ம் தேதி வைகுண்ட ஏகாதசி நடைபெறுகிறது. முன்னதாக ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு ஜனவரி 1, 2 தேதிகளில் கோயில் நடை திறந்திருக்கும்.

இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ரங்கநாதருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை தேவதானம் கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள் சார்பில் நடைபெறுகின்றன. குறிப்பாக, ஜனவரி 1ம் தேதி காணியம் பாக்கம் ஊராட்சி மன்றம் சார்பிலும், ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசி தினத்தன்று தேவதான ஊராட்சி சார்பிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பதால், மீஞ்சூர் மற்றும் காட்டூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 

Related Stories: