சிறுவயது தோழியை மணக்கும் அம்பானியின் மகன்: நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பங்கேற்பு

மும்பை: தனது சிறுவயது தோழியான  ராதிகா மெர்ச்சண்ட், தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணம் செய்து கொள்கிறார். அதற்கான நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர். பிரபல தொழிலபதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் விரன் மெர்ச்சண்ட் மகள் ராதிகா மெர்ச்சண்டிற்கும் திருமண நிச்சயதார்த்த பார்ட்டி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ஷாருக்கான், ரன்பீர் கபூர் - அலியா பட், ஜான்வி கபூர், ரன்வீர் சிங் உட்பட ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆனந்த் அம்பானி தனது சிறுவயதிலிருந்தே ராதிகா மெர்ச்சண்டுடன் பழகி வருகிறார்.

மேலும் ராதிகாவின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சியானது, அம்பானியின் ஜியோ வேல்டு சென்டரில் தான் நடந்தது. நியூயார்க்கில் தனது படிப்பை முடித்த ராதிகா, 2017ம் ஆண்டு மும்பையில் தனியார் நிறுவனம் ஒன்றில் சிறிது காலம் வேலை செய்தார். இப்போது தனது தந்தையின் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் இயக்குனராக இருக்கிறார். இந்நிலையில் ஆனந்த் - ராதிகா ஜோடியின் நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில் எப்போது இருவருக்கும் திருமணம் என்பது தொடர்பாக எந்த வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

ஆனந்த் அம்பானிதான் தற்போது முகேஷ் அம்பானியின் எரிசக்தி தொடர்பான அனைத்து தொழில்களையும் கவனித்து வருகிறார். அம்பானியின் மகள் ஈஷா அம்பானிக்கு சமீபத்தில்தான் அமெரிக்காவில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் இந்தியா திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: