×

பிரதமர் மோடி தாயார் மறைவு: ஏ.சி.சண்முகம் இரங்கல்

சென்னை: புதிய நீதிக்கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை: பிரதமர் மோடியின் தாயார் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் துயரமடைந்தேன். 100 வயதில் அடியெடுத்து வைத்த அவர், தனது வாழ்வின் இறுதிகாலம் வரை எவர் உதவியுமின்றி தானே நடந்து வந்தார்.

தன் மகனை உலக நாடுகளிடையே உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கும் வீரத்திருமகனை பெற்றெடுத்த ஹீராபென்னை பிரதமர் மோடி தெய்வமாக வணங்கி வந்தார். அவரது மறைவு மோடிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.


Tags : PM Modi ,A.C. ,Shanmugam , Death of PM Modi's mother: A.C. Shanmugam condoles
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்