மதுரை விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் 99% நிறைவடைந்துள்ளது: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை: மதுரை விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிகள் 99% நிறைவடைந்துள்ளது என்று அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசு கரும்பு வழங்கப்பட உளள்து என்று ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

பரந்தூர் விமான நிலையம் 100 % கட்டாயம் வரும் என்றும் சென்னை வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். எந்த பிரச்சையானாலும் மக்களுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்று அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் பரந்தூர் பகுதியில் 2-வது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்காக சுமார் 4,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அரசு புறம்போக்கு நிலங்கள் போக 2,000 ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும், 2000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்பட உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் சென்னையில் விமான போக்குவரத்தின் வளர்ச்சி, 2023-24 ஆண்டு முதல் 2069-70 ஆண்டு வரை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் விமான போக்குவரத்து எந்த அளவுக்கு அதிகரிக்கும் ஆகியவை தொடர்பாகவும் அறிக்கை தயார் செய்யப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: