வஞ்சி பாளையம் - சோமனூர், குளித்தலை - பேட்டைவாய்த்தலையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் 9 புறநகர் ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

கோவை: வஞ்சி பாளையம் - சோமனூர், சாமல்பட்டி - தசம்பட்டி - தாதம்பட்டி, குளித்தலை - பேட்டைவாய்த்தலையில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை, கரூர் வழியாக இயக்கப்படும் ரயில்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. காலை 9.05-க்கு புறப்படும் கோவை-சேலம் ரயில் (06802) ஜனவரி 1, 3, 5, 6, 7, 8, 10, 12, 13, 14, 15, 17, 19, 20, 22, 24 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காலை 9.35-க்கு புறப்படும் கோவை - மேட்டுப்பாளையம் ரயில் (06812) ஜனவரி 26-ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்றும் காலை 10.55-க்கு புறப்படும் மேட்டுப்பாளையம் - கோவை ரயில் (06813) ஜனவரி 26-ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. பகல் 1.05-க்கு புறப்படும் மேட்டுப்பாளையம் - கோவை ரயில் (06815) ஜனவரி 26-ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் 3.55-க்கு புறப்படும் கரூர் - திருச்சி (06882) ஜனவரி 20, 22, 23, 24, 25, 26, 27, 29, 30, 31 தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காலை 11.50 மணிக்கு புறப்படும் கோவை -மேட்டுப்பாளையம் ரயில் (06814) ஜனவரி 26-ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மாலை 6.20-க்கு புறப்படும் திருச்சி - கரூர் ரயில் (06123) ஜனவரி 20, 22, 23, 24, 25, 26, 27, 29, 30, 31 தேதிகளில் ரத்து. பகல் 1 மணிக்கு புறப்படும் திருச்சி - பாலக்காடு ரயில் (16843) ஜனவரி 31-ல் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  காலை 6.30-க்கு புறப்படும் பாலக்காடு - திருச்சி விரைவு ரயில் (16844) ஈரோடுடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 6.30-க்கு புறப்படும் பாலக்காடு - திருச்சி விரைவு ரயில் (16844) பிப்ரவரி 1-ம் தேதி ஈரோட்டில் இருந்து காலை 10.30-க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories: