×

மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

மேற்குவங்கம்: மேற்குவங்கத்தில் வந்தேபாரத் ரயில்சேவை தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் குஜராத்தில் இருந்து பங்கேற்றார். தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட நிலையில் காணொலியில் அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். ஹவுரா - நியூஜல் பைகுரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.ஏற்கனவே ஒப்புக்கொண்ட அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் பங்கேற்றுள்ளார்.

ஹவுரா-நியூ ஜல்பைக்குரி இடையே வந்தே பாரத் ரயில்சேவையை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வந்தேபாரத் விரைவு ரயில் ஹவுரா-நியூ ஜல்பைக்குரி இடையேயான 600 கி.மீ தூரத்தை ஏழரை மணி நேரத்தில் கடக்கிறது . ஹவுரா-நியூ ஜல்பைகுரி வந்தே பாரத் ரயில் போல்பூர், மால்டா டவுன், பார்சோய் ஆகிய 3 நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.

நான் மேற்கு வங்கத்திற்கு வரவிருந்தேன், ஆனால் தனிப்பட்ட காரணங்களால் என்னால் அங்கு வர முடியவில்லை. வங்காள மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்: ரயில்வே திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி இன்று மேற்கு வங்க மாநிலத்துக்கு பயணம் செய்து ரூ.7,800 கோடிமதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.  ஹவுரா-நியூஜல்பை குரி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவுக்கு நாளை 11மணிக்கு செல்லும் பிரதமர் மோடி, 11.15 மணிக்கு ஹவுரா ரயில்நிலையம் செல்கிறார். அங்கு ஹவுரா-நியூ ஜல்பைகுரி நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலே பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

இந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கியதற்கு மேற்கு வங்க மக்கள் சார்பில் மிக்க நன்றி. இது உங்களுக்கு ஒரு சோகமான நாள். உங்கள் தாய் என்றால் எங்கள் அம்மா என்றும் அர்த்தம். உங்கள் பணியை தொடர கடவுள் உங்களுக்கு வலிமை தரட்டும், கொஞ்சம் ஓய்வெடுங்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஹவுராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் பிற தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Tags : PM Modi ,Vande ,Bharat ,West Bengal , PM Modi inaugurated the Vande Bharat train service in West Bengal through a video presentation
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!