தினகரன் ஷேர்சாட் தளத்திற்கு 2022ம் ஆண்டுக்கான ஷேர்சாட் 'ஸ்டார் பார்ட்னர் விருது'

சென்னை: தினகரன் சமூக வலைத்தளப் பக்கங்களில் ஒன்றாக தினகரன் டெய்லி நியூஸ் சேர்சாட் தளமும் இயங்கி வருகிறது. இந்த தளத்தை, இன்றைய தேதியில், 4 லட்சத்து 6 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். தமிழ்நாடு அளவில் மக்கள் அதிகமாக பின்தொடரும் செய்தி நிறுவனங்களில் தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் தினகரன் நிறுவனமும், சேர்சேட் நிறுவனமும் இணைந்து வருடம் முழுவதும் உலகெங்கும் நடைபெறும் நிகழ்வுகளையும், மக்களுக்குத் தேவையான செய்திகளையும், ஒன்றிய மாநில அரசுகளின் முக்கியத் திட்டங்களையும், உடனுக்குடன் வழங்கி வருகிறது. இதில் தினகரன் தமிழ் சேர்சாட் தளம், மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் குறுஞ்செய்தியாகவும், அதைப் பற்றிய விரிவான தகவலுடன் காணொளி காட்சியாகவும் வழங்கி வருகிறது.

இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் அவ்வாறு வழங்கப்படும் அனைத்து செய்திகளும் பெரும்பாலான மக்களை சென்றடைவதே இதன் சிறப்பு. இவ்வாறு தொடர்ந்து பல்வேறு முக்கியத் தகவல்களை வழங்கி வரும் தினகரன் சேர்சேட் தளத்திற்கு 2022ம் ஆண்டுக்கான சேர்சாட் Star Partner விருதானது வழங்கப்பட்டுள்ளது. தினகரன் தமிழ் நிறுவனத்தோடு ZEE தமிழ் நியூஸ் மற்றும் நியூஸ் 7 தமிழ் நிறுவனங்களும் இந்த விருதைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: