சென்னை: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தாயார் ஹீராபென்னுடன் பிரதமர் கொண்டிருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பை நாங்கள் அறிவோம். தாயாரின் மறைவால் ஏற்பட்ட துக்கத்தை யாராலும் தாங்கிக் கொள்வது மிகவும் கடினம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.