மனித உரிமை ஆணைய உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜ இளங்கோ, வழக்கறிஞர் கண்ணதாசன் பொறுப்பேற்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ராஜ இளங்கோ மற்றும் வழக்கறிஞர் கண்ணதாசன் ஆகிய இருவரும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்கள் பதவி, முன்னாள் உறுப்பினர்கள் ஓய்வுபெற்ற பின்பு காலியாக இருந்து வந்தது.  

இந்நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்ட அரசாணையின்படி, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ராஜ இளங்கோ மற்றும் வழக்கறிஞர்  கண்ணதாசன் ஆகியோர் பிற்பகல் பொறுப்பேற்றுக் கொண்டனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: