ரிலையன்ஸ் குழுமம் தலைவரான முகேஷ் அம்பானி பதவியேற்று 20 ஆண்டுகள் முடிவு

மும்பை: ரிலையன்ஸ் குழுமம் தலைவரான முகேஷ் அம்பானி பதவியேற்றி 20 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் அவரின் தலைமையில் ரிலையன்ஸ் பெரும் வளரச்சி அடைந்துள்ளது. 2002 ரிலையன்ஸ் குழுமம்தின்  நிறுவனர் திருபாய் அம்பானி மரணம் அடைந்த பின்,  முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிருவாக இயக்குனர் மற்றும் சேர்மனாக, பதவியேற்றார். கடந்த 20 ஆண்டுகளில் ரிலையன்ஸின் வருவாய் ஆண்டுகளுக்கு 15% அதிகரித்துள்ளது. தற்போது 7.92 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

நிகர லாபம் ஆண்டுக்கு 16% அதிகரித்து, தற்போது ரூ 67,845 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில், ரிலையன்ஸின் பங்குதார்களுக்கு, 17.4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் சொத்து மதிப்பு உருவாக்கியுள்ளார். ரிலையன்ஸ் ஜியோ தொடங்கப்பட்ட பின், டேட்டா கட்டணங்கள் 2016ல் 1ஜிபி ரூ. 500-ஆக இருந்தது. தற்போது ரூ. 12-ஆக  உலகிலேயே மிக குறைத்த அளவுக்கு சரிந்துள்ளது.     

Related Stories: