சிவகங்கை: அரசியலமைப்பு சட்டத்தில் நிரந்தர மாற்றம் செய்த பிறகு ஒரேநாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும் என ஒன்றிய இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். வருங்காலத்தில் ஆட்சிக்கு வருவோர் மீண்டும் சட்டத்தை மாற்றம் செய்யாத வகையில் அமல்படுத்தப்படும் ஒன்றிய இணையமைச்சர் கூறினார்.
மக்கள் விரும்பாவிட்டால் 8 வழிச்சாலை திட்டத்தை புகுத்த போவதில்லை என ஒன்றிய இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்த முடியாமல் போனாலோ, மக்கள் விரும்பாவிட்டாலோ திட்டம் செயல்படுத்தப்படாது என ஒன்றிய இணையமைச்சர் தெரிவித்தார்.
மேலும் 6 மாதங்களில் சுங்கச்சாவடிகள் இல்லாமல் கேமராக்கள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும். கேமராக்கள் மூலம் கார், வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு வங்கி கணக்கிலிருந்து பணம் பிடித்தம் செய்யப்படும் என்றார்.