×

கடந்த 8 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.1,488 கோடியும், தமிழ் வளர்ச்சிக்கு வெறும் ரூ.74 கோடியும் ஒதுக்கியுள்ளது ஒன்றிய அரசு

டெல்லி: கடந்த 8 ஆண்டுகளில் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ரூ.1,488 கோடியும், தமிழ் வளர்ச்சிக்கு வெறும் ரூ.74 கோடியும் ஒன்றிய அரசு ஒதுக்கியது அம்பலமாகியுள்ளது. செம்மொழிகளான தமிழ், சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை குறித்து கரூர் எம்.பி. ஜோதிமணி கேள்வி எழுப்பியிருந்தார். ஜோதிமணி எம்.பி. கேள்விக்கு கல்வி அமைச்சர் சுமாஷ் சர்கார் அளித்துள்ள பதிலில் நிதி ஒதுக்கீடு விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அதில், கடந்த 8 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தமிழை விட சமஸ்கிருதத்திற்கு கூடுதல் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழை வளர்ப்பதற்காக சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு 8 ஆண்டுகளில் ரூ.74 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதம், பாலி, பிராகிருத மொழிகளை வளர்க்க டெல்லியில் உள்ள சமஸ்கிருத பல்கலைக்கு 8 ஆண்டுகளில் ரூ.1,488 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் தமிழ் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு ஒதுக்கிய ஒட்டுமொத்த தொகை ஓராண்டு சமஸ்கிருத வளர்ச்சிக்கான நிதியை விட குறைவாகும்.

இந்தி, சமஸ்கிருதத்துக்கு ஒன்றிஅய அரசு முக்கியத்துவம் தருவதாக குற்றம்சாட்டப்படும் நிலையில் நிதி ஒதுக்கீடு அதனை அம்பலப்படுத்தியுள்ளது. வெறும் 16,000 பேர் மட்டுமே பேசக்கூடிய சமஸ்கிருத மொழிக்கு ரூ.1,488 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2019 - 20ல் சமஸ்கிருத வளர்ச்சிக்காக ரூ.247 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2019-20-ல் தமிழ் வளர்ச்சிக்காக வெறும் ரூ.10 கோடி மட்டுமே மோடி அரசு ஒதுக்கியுள்ளது.

Tags : Union Government , In the last 8 years, the Union Government has allocated Rs 1,488 crore for Sanskrit language development and only Rs 74 crore for Tamil development.
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...