×

ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரையில் எந்தவித பாதுகாப்பு குறைப்பாடும் இல்லை: CRPF விளக்கம் .

டெல்லி : ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் எந்தவித பாதுகாப்பு குறைபாடும் இல்லையென காங்கிரஸ் குற்றச்சாற்றுக்கு துணை ராணுவப்படையான CRPF மறுத்து தெரிவித்து இருக்கிறது. டிசம்பர் 24ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஒற்றுமை யாத்திரையின் போது, ராகுல் காந்தி நடை பயணத்தில் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

 மேலும் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பிவைத்துருந்தார்கள். மேற்கொண்டு வரும் பரத் ஜோடோ யாத்திரையில் இதுபோல் சம்பவம் ஏற்படாமல், நடவடிக்கை எடுக்குமாறு அந்த கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுருந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக  மத்திய துணை ராணுவ படையினரான CRPF தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல் காந்தி பாதுகாப்பு விதிமுறைகளை பலமுறை சந்தர்ப்பங்களில் மீறியதாகவும், அதை போல் ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை நடை பயணம் போது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக கூறும் காங்கிரஸ் குற்றச்சாற்றுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுருக்கிறது.

அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் கண்டிப்பாக பின்பற்றப்பட்டுள்ளன, மேலும் போதுமான அளவு பாதுகாப்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக CRPF விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் தரப்பில் எழுதப்பட்ட கடிதத்தில் டெல்லி காவல்துறை இந்த ஊடுருவை கட்டுப்படுத்தவில்லை. பாதுகாப்பு குளறுபடி சமயத்தில் டெல்லி காவல்துறை மவுனம் சாதித்தாக காங்கிரஸ் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது.

ராகுல் காந்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு ஏற்படுகளுக்கு CRPF மற்றும் மாநிலக்காவல்துறை மற்றும் பாதுகாப்பு ஏஜென்சி இணைந்து செயல்பட்டன.ராகுல் காந்தி தரப்பில் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் மீறப்பட்டது. பல சந்தர்ப்பங்களை கவனிக்கப்பட்டு இந்த உண்மை அவருக்கும் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டுருக்கிறது. 2020 முதல் தற்போது வரை 113 தடவை இந்த பாதுகாப்பு வழிகாட்டு மீறல்கள் ராகுல் காந்தி செய்யப்பட்டதாக CRPF தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.


Tags : Rahul Gandhi ,CRPF , CRPF Explains Any Security Lax During Rahul Gandhi Unity Yatra
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...