×

கேரளாவில் சமீபத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தொடர்பான 56 இடங்களில் என்ஐஏ சோதனை

கொல்லம்: கேரளாவில் சமீபத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தொடர்பான 56 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சோதனை நடத்தி வருகிறது. தடைசெய்யப்பட்ட PFI இன் உறுப்பினர்கள் இன்னும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நிதி திரட்டவும் சேகரிக்கவும் முயற்சித்து வருகின்றனர் என்று தகவல் வெளியானது. மேலும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்ட பிறகு கேரளாவில் அதன் நிர்வாகிகளின் செயல்பாடுகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், டெல்லியில் இருந்து என்.ஐ.ஏ.வின் முக்கிய அதிகாரிகள் கேரளாவுக்கு இரவில் வருகை தந்தனர்.

இவர்கள் கேரளாவில் 56 இடங்களில் அதிகாலை முதலே சோதனை தொடங்கப்பட்டது. கேரள காவல்துறையின் உதவியோடு இந்த சோதனை நடைபெற்றது. இதில் எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் 12 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல ஆலப்புலா, மலப்புரம் மாவட்டங்களில் தலா 4 இடங்களிலும், திருவனந்தபுரம், பத்தினம் திட்டா மாவட்டங்களில் தலா 3 இடங்களிலும், கொல்லம், கோழிக்கோடு மாவட்டங்களில் தலா இரண்டு இடங்களிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. இந்தியா முழுக்க தடை செய்யப்பட்டாலும், கேரளாவில் இந்த அமைப்பு ரகசியாமாக செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்த நிலையிலேயே இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே சீல் வைக்கப்பட்ட இதன் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்பட்டும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

Tags : NIA ,Popular Front of India ,Kerala , NIA raids 56 places linked to Popular Front of India, recently banned organization in Kerala
× RELATED குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய...