×

மயிலாப்பூரில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம்: அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்

சென்னை: சென்னை மயிலாப்பூரில் ராம்ராஜ் காட்டன் ஷோரூமை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.தென் மாநிலம் முழுவதும் வெண்மை நிற ஆடைகளை உற்பத்தி செய்து, விற்பனையில் சாதனை படைத்து வருகிறது ராம்ராஜ் காட்டன் நிறுவனம். பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் காப்பதில் அக்கறை கொண்டுள்ள இந்நிறுவனம், தமிழகத்திலுள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் ஷோரூம்களை திறந்து வெற்றி கண்டுள்ளது. மேலும் உலகெங்கும் பரவியுள்ள தமிழருக்காக ஆன்லைன் விற்பனையை விரிவுபடுத்தியதோடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா நேற்று நடந்தது. ராம்ராஜ் நிறுவன தலைவர் நாகராஜன் வரவேற்றார். இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு புதிய ஷோரூமை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார். விழாவில் மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு, அண்ணா நகர் எம்எல்ஏ எம்.கே.மோகன் மற்றும் அறநிலையத்துறை செயலாளர் சந்தரமோகன், நிறுவன நிர்வாகிகள், ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ராம்ராஜ் காட்டன் ஷோரூம்களில் அட்ஜஸ்டபிள், பேன்சி பார்டர், கறை படியாத, நறுமண, ரிங்கிள் பிரி, சுப முகூர்த்த, எம்ப்ராய்டரி, மயில்கண், பஞ்ச கச்ச, பட்டு வேட்டி என வேட்டி ரகங்கள் உள்ளன. காட்டன், எம்பராய்டரி, ரிங்கிள் பிரி, கூல் காட்டன், சுபமுகூர்த்த, அல்டிமேட், டிசைனர், பட்டு, பார்டர் மேட்சிங் லினன் சர்ட்டுகள் என ரகங்கள் உள்ளன. இளைஞர்களின் மனம் கவரும் வகையில் பல வண்ணங்களில் டி-சர்ட்டுகளும் இடம்பெற்றுள்ளன. ஆண்களுக்காக பிளையின் வெண்மையில் மட்டுமின்றி டிசைனுடன் கூடிய பனியன்கள், ஜட்டிகள், ‘டிரங்க்ஸ்’ எனப்படும் வேட்டி கட்டிக்கொள்ள பிரத்யேகமான ‘வேட்டி டிராயர்கள்’ என்ற உள்ளாடையும், பிரத்யேக பெல்ட்டுகள், கைக்குட்டைகள், ஷூ சாக்ஸ், டவல்களும் உள்ளன. பெண்களுக்கென உள்ளாடைகளும் லெக்கின்ஸ், சிம்மிஸ் மற்றும் அனைத்துவிதமான உள்ளாடைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒயிட் மற்றும் பல வண்ணங்களில் முகக்கவசங்களும் உள்ளது.


Tags : Ramraj Cotton Showroom ,Mayilapur ,Minister ,Sekarbabu , Ramraj Cotton Showroom, Mylapore was inaugurated by Minister Shekhar Babu
× RELATED சென்னையில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை