×

அம்பத்தூர் மண்டலத்தில்ரூ. 9.34 கோடியில் திட்டப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல்

அம்பத்தூர்: சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலத்திற்கு உட்பட்ட 13 வார்டுகளில் ரூ.9.34 கோடியில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அடிக்கல் நாட்டினார். பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் 7, அம்பத்தூர் தொகுதிக்குட்பட்ட  89, 90, 93, 84, 85, 86, 87, 88, 79, 80, 81, 82, 83 ஆகிய 13 வார்டுகளில் 9 கோடியே 34 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற உள்ளன.

அதன்படி, தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ.2 கோடியே 67 லட்சத்து 40 ஆயிரத்தில் 13 நவீன கழிப்பறைகள், ரூ.2.2 கோடியே 96 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு நகர்ப்புற ஆதாரம் மற்றும் உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவன நிதியிலிருந்து 13 பூங்கா உருவாக்கம் மற்றும் மேம்படுத்தும் பணிகள் நடக்கிறது. இதுபோல, பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல வாழ்வு மையம் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் சார்பில் 63 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 2 சுகாதார நிலையம், தூய்மை இந்தியா திட்டத்தில் 21 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் ஒரு மின் இயக்கி நிலையம் அமைக்கும் பணி, கூவம் நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை நிதியில் 92 லட்சத்து ஆயிரம் மதிப்பீட்டில் பாடி, பாடிக்குப்பம் வழியாக செல்லும் கூவம் நதிக்கரையை சுத்தப்படுத்தும் பணிகள்,

மேலும், சென்னை பெருநகர மாநகராட்சி நிதியில் 67 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மாமன்ற உறுப்பினர்கள் அலுவலகம், சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ்  மாமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி மண்டல நிதியில் 60 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் நிதியில் 2 இடுகாடு மற்றும் சுடுகாடு அமைப்பது, தூய்மை இந்தியா திட்டத்தில் 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கனரக குப்பை அள்ளும் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கும் பணிகள் என மொத்தம் சுமார் 9 கோடிய 34 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் துவக்க விழா நேற்று நடந்தது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி அடிக்கல் நாட்டினார். மேலும் பணிகள் குறித்து கேட்டறிந்த அவர், பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், 7வது மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி, அம்பத்தூர் கிழக்கு வடக்கு பகுதி திமுக செயலாளர் டி.எஸ்.பி.  ராஜகோபால், எம்.டி.ஆர்.நாகராஜ் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலர் ராஜேஸ்வரி, செயற்பொறியாளர் சதீஷ்குமார், குமரேசன் மேலும் மாமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.


Tags : Ambattur ,Minister ,Shekharbabu ,Adikkal , In Ambattur Zone Rs. 9.34 crore projects: Minister Shekharbabu Adikkal
× RELATED மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு