மருத்துவம், பொறியியல் படிப்புக்கு தமிழில் பாடப்புத்தகம் திமுக அரசு தமிழுக்கு என்றும் முக்கியத்துவம் அளிக்கும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

துரைப்பாக்கம்: திமுக அரசு தமிழுக்கு என்றும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயல்படுகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி, 195வது வட்ட திமுக  சார்பில், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா  பொதுக்கூட்டம், சென்னை மாநகராட்சி 195வது வார்டு மாமன்ற உறுப்பினரும், வட்ட செயலாளருமான க.ஏகாம்பரம் தலைமையில் மேட்டுக்குப்பம், பல்லவன் குடியிருப்பு பஸ் நிறுத்தம் அருகில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், திமுக துணை பொதுச்செயலாளரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்   ஆகியோர்  பங்கேற்றனர்.

இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

மருத்துவத்துறை, பொறியியல் துறை, கல்லூரியில் தமிழில் புத்தகம் வர வேண்டும்  என இப்போது சிலர் சொல்கிறார்கள். ஆனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு  வருடத்திற்கு முன்பே மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் தமிழில்  பாட புத்தகம் வர வேண்டும் என்றார். அதன்படி, வருகிற 16ம்தேதி அகில உலக  புத்தக கண்காட்சி தினத்தில், 13  மருத்துவத்துறை தமிழாக்கம் செய்த புத்தகங்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட பொறியியல் துறை புத்தகங்களை  முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். எனவே, திமுக அரசு தமிழுக்கு என்றும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயல்படும். இந்த சிறப்பு தமிழக வரலாற்றில் தமிழுக்கு கிடைத்திருக்கின்ற  ஒரு பெரிய முத்திரை. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், எம்பி தமிழச்சி   தங்கபாண்டியன், மாநகராட்சி துணை மேயர்  மகேஷ்குமார், மதுரவாயல் எம்எல்ஏ கணபதி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபாகரராஜா எம்எல்ஏ., தலைமை சட்ட திருத்த  குழு செயலாளர் பாலவாக்கம் சோமு, எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளரும், 15வது மண்டல குழு தலைவருமான வி.இ.மதியழகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் எம்.கே.ஏழுமலை, மாவட்ட பிரதிநிதிகள்  கலைச்செல்வன், சந்திரபாபு, திருப்பதி ராஜன், வட்ட துணை செயலாளர் விஜயகுமார், அவைத்தலைவர் சம்பத்குமார், விஜயா, பூராஜன்,   மாநில இலக்கிய அணி தலைவர் கவிதை பித்தன், மாவட்ட அவைத்தலைவர் குணசேகரன், மாவட்ட துணை செயலாளர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: