×

சபரிமலைக்கு வருபவர்களிடம் வசூல் வேட்டை ஐயப்ப பக்தர் வேடத்தில் கேரள போலீஸ் ரெய்டு: பணம், மிட்டாய் பாக்கெட்டுகள் பறிமுதல்

செங்கோட்டை : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் வாகனங்களுக்கு ஆரியங்காவு போக்குவரத்து சோதனை சாவடியில் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதைதொடர்ந்து கேரள லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் படையினர் ஐயப்ப பக்தர்கள் வேடமணிந்து ஆரியங்காவிலுள்ள கேரள மாநில போக்குவரத்து சோதனை சாவடி நேற்று முன்தினம் சென்றனர். ஐயப்ப பக்தர்களுக்கு பின்னால் இவர்களும் வரிசையில் நின்றனர்.

அப்போது அலுவலகம் முன், ஏஜென்ட் ஒருவர் நின்று ஆட்டோ டிரைவர்களிடமும் ஐயப்ப பக்தர்களிடமும் பணம் வசூலித்து சீல் வைத்த ஆவணங்களை கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அவரை பிடிக்க முயன்ற போது  தப்பி ஓடினார். தொடர்ந்து, ஆர்டிஓ அலுவலகத்திற்குள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1446 கிடைத்தது. சீல் வைக்கப்பட்ட மேசையின் மேல் ரூ.250ம், கடலை மிட்டாய், பொரி மிட்டாய், சிப்ஸ், நிலக்கடலை பாக்கெட்டுகள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து, நேற்று 2வது நாளாக ஆரியங்காவு ஆர்டிஓ மற்றும் கலால் சோதனை சாவடிகளில் அதிகாரிகள் சோதனை நடத்திகணக்கில் வராத ரூ..2550 பறிமுதல் செய்தனர். கேரள போலீசாரின் இந்த அதிரடி சோதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags : Kerala Police ,Iyapa ,Sabarimala , Kerala police raids in the guise of Ayyappa devotees to collect money from Sabarimala visitors: cash, candy packets seized
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...