×

பொருளாதார சரிவை மீட்க முயற்சி எல்லையை திறக்கும் சீனா: உலகம் முழுவதும் கொரோனா பரவும் அபாயம்

பீஜிங்: கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி, சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் பாஸ்போர்ட். விசா தரப்போவதாக சீன அரசு கூறியுள்ளதால் உலக நாடுகளுக்கு கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வரும் ஜனவரி 8-ம் தேதி முதல் சீனா எல்லைகளை திறக்கப் போவதாகவும், வௌிநாட்டு பயணிகளுக்கான விசாக்களை மீண்டும் வழங்க போவதாகவும் சீன அரசு நேற்று அறிவித்தது. சீனாவின் பொருளாதார சரிவை மீட்டெடுக்க  வரும் 2023 ஜனவரி முதல்  மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க சீன  அரசு முடிவு செய்துள்ளதாக  சீன அதிபர் ஜீ ஜின்பிங் கூறினார்.

கடந்த 2020ம் ஆண்டு சீனாவின் உகானில் கண்டறியப்பட்ட  கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் பரவியதில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். உயிரிழப்புகளை தடுக்க உலகம் முழுவதும் ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த கட்டுப்பாடுகளால் சீனா உள்ளிட்ட உலக நாடுகள் பொருளாதார சரிவை சந்தித்தன. உலகின் மற்ற நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில், இதுவரை கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருந்த சீனாவில், மக்களின் தொடர் போராட்டங்களால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால், பிஎப் 7 உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால், கொரோனா வைரஸ் மீண்டும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனிடையே வரும் புத்தாண்டு முதல் எல்லைகளை திறக்கப் போவதாக சீன அரசு அறிவித்துள்ளதால் உலகம் முழுவதும் கொரோன பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Tags : China , Economic collapse, efforts to recover, border, opening China
× RELATED சீனாவில் பிரம்மாண்ட கார்...