×

வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இதில், 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள, 1வது நிலையின் 3வது அலகில் கடந்த 25ம் தேதி கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. கொதிகலன் கசிவு சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து, மீண்டும் 210மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

Tags : North Chennai Thermal Power Station , Power generation at North Chennai Thermal Power Station
× RELATED வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு