×

இந்தியாவிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு இனத்தை பாதுகாக்கவும் அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் இந்தியாவிலேயே முதன்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை அமைத்து தமிழ்நாடு அரசு 28ம் தேதி (நேற்று) ஆணை வெளியிட்டுள்ளது.

இத்திட்டம் 2022 முதல் 2027 வரை ஐந்து ஆண்டுகளில் ரூ.25.14 கோடி செலவில் செயல்படுத்தப்படும். நீலகிரி வரையாடு மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கே உரிய சிறப்பினங்களில் ஒன்றாகும். இந்த வரையாடு பற்றிய குறிப்புகள் ஐம்பெருங்காப்பியங்களில் இரு காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் சீவகசிந்தாமணியில் காணப்படுகின்றன. நீலகிரி வரையாடு திட்டம் பல்வேறு உத்திகள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, டெலிமெட்ரிக் ரேடியோ காலரிங் பொருத்தி தொடர்ந்து பாதுகாத்தல், பழைய வாழ்விடங்களில் மீண்டும் வரையாட்டினை அறிமுகம் செய்தல், நோய்களை கண்டறிந்து பாதிக்கப்பட்ட வரையாட்டிற்கு சிகிச்சை அளித்தல், சோலை புல்வெளிகளை சீரமைத்தல், களப்பணியாளர்களுக்கு தளவாடங்கள் மற்றும் பயிற்சி அளித்தல், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 7ம் தேதியை ‘வரையாடு தினம்’ என அனுசரித்தல் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் நீலகிரி வரையாடுகள் இனம் அழிவில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உலகளாவிய இயற்கை பாதுகாப்பு நிதிய அறிக்கை 2015-ன்படி 3,122 வரையாடுகள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அதி முக்கியமான பல்லுயிர் மண்டலம் என அங்கிகரிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை இவை வாழ்விடமாக கொண்டுள்ளன. உலகளாவிய இயற்கை பாதுகாப்பு நிதிய அறிக்கை 2015-ன்படி 3,122 வரையாடுகள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது.

Tags : India ,Tamil Nadu Govt , India's First Nilgiris Draft Project: Tamil Nadu Govt
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...