×

மதுரை விமான நிலையத்தில் இந்தியில் பேசச் சொல்லி சிஆர்பிஎப் வீரர்கள் டார்ச்சர்: சித்தார்த் பரபரப்பு புகார்

அவனியாபுரம்: பாய்ஸ்’ தமிழ் திரைப்படத்தில் அறிமுகமாகி பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் சித்தார்த். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், மதுரை விமான நிலையத்தில் விமானம் ஏறுவதற்காக எனது வயதான பெற்றோர் சென்றனர். அவர்களது உடமைகளை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்து, பையில் இருந்த சில்லறை நாணயங்களை வெளியே எடுக்கும்படி வற்புறுத்தியுள்ளனர். இதற்கு எனது பெற்றோர் ஆங்கிலத்தில் பதிலளித்தபோது, அவர்கள் இந்தியில் பேசியுள்ளனர். மேலும் இந்தியில் பேசும்படி எனது பெற்றோரை வற்புறுத்தியுள்ளனர்.

எங்களுக்கு இந்தி தெரியாது என கூறியபோது, இது இந்தியா. இங்கு இந்தியில்தான் பேச வேண்டும் என கடுமையாக நடந்துகொண்டனர்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கூட்டமே இல்லாத மதுரை விமான நிலையத்தில் அரை மணி நேரம் வரை எனது வயதான பெற்றோரை காத்திருக்க வைத்ததாகவும் குற்றம்சாட்டி சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சித்தார்த்தின் இப்பதிவுக்கு நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்தும் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்தும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.



Tags : CRPF ,Madurai ,Siddharth , CRPF soldiers tortured by asking them to speak in Hindi at Madurai airport: Siddharth complains
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...