×

நடப்பு ஆண்டிற்கான ஐசிசியின் வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பரிந்துரை

துபாய்: நடப்பு ஆண்டிற்கான ஐசிசியின் வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் உட்பட 4 வீரர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.  
2022ம் ஆண்டிற்கான ஐசிசியின் வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் உட்பட தென்னாப்பிரிக்காவின் மார்கோ ஜான்சன், ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் ஜாடன் மற்றும் நியூசிலாந்தின் பின் ஆலன் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

அர்ஷ்தீப் சிங் கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமாகி ஒரு ஆண்டில் 20 ஓவர் போட்டிகளில் 33 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். மேலும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியிலும் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன், ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் ஜடான், நியூசிலாந்தின் பின் ஆலன் ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனால் இந்த ஆனதிற்கான ஐசிசியின் வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜான்சன், இப்ராஹிம் ஜாடன் மற்றும் பின் ஆலன் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

Tags : India ,Arshdeep Singh , India's young fast bowler Arshdeep Singh nominated for ICC's Emerging Player of the Year Award
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை