செங்கரும்பை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வலியுறுத்தி தி.மலையில் வரும் 2ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: செங்கரும்பை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் திருவண்ணாமலையில் வரும் 2ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி  பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக  இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி  பழனிசாமி  வெளியிட்ட அறிக்கை:

ஆண்டுதோறும் தை பொங்கலை சிறப்பாக ெகாண்டாடும் வகையில், ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு சர்க்கரை, அரிசி, செங்கரும்பு, ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுவது வழக்கம். விவசாயிகள் பல்வேறு துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்து வரும் வேளையில், 2023ம் ஆண்டு தை பொங்கலை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட இருக்கும் பரிசு தொகுப்பில் செங்கரும்பை வழங்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

எனவே, தமிழக அரசை கண்டித்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்க வலியுறுத்தியும், விவசாயிகளிடம் இருந்து செங்கரும்பை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வலியுறுத்தியும், அதிமுக விவசாய பிரிவின் சார்பில், வரும் 2ம் தேதி காலை 10 மணியளவில், திருவண்ணாமலையில்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Related Stories: