×

ராகுல் காந்தியை ராமராக நான் உருவகப்படுத்தவில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் திடீர் மறுப்பு..!!

டெல்லி: ராகுல் காந்தியை ராமராக உருவகப்படுத்தி பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தாம் அவ்வாறு பேசவில்லை என்று தீடிரென மறுத்துள்ளார். ராமர் பாதையில் ராகுல் காந்தி செல்வதாகவே தாம் கூறியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்திய ஒற்றுமை பயணத்தில் உள்ள ராகுல் காந்தி டெல்லி கடும் குளிரில் டீஷிர்ட் மட்டுமே அணிந்துகொண்டு செல்வது குறித்து சல்மான்  குர்ஷிதிடம் கேள்வி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் யோகிபோல் உள்ள  ராகுல்காந்தி தனது தபசிதியானத்தில் நோக்கமாக உள்ளார் என்று குறிப்பிட்டார்.

ராமரின் பாதரட்சைகள் நீண்ட தூரம் செல்லும் என்ற அவர் சில நேரங்களில் ராமர் செல்லாத இடங்களில் அவரது பாத ரட்சைகளை பரதன் தூக்கிக்கொண்டு செல்வார் என்றார். தற்போது உத்திரபிரதேசதிற்கு ராமரும் அவரது பாதரட்சைகளும் வந்துள்ளதாக சல்மான் குர்ஷித் வர்ணித்தார். இதற்கு பாரதீய ஜனதா தலைவர்கள் கடுமையாக சாடி கண்டித்தனர். இந்த நிலையில் தாம் ராகுல் காந்தியை ராமர் என்று கூறவில்லை என்று சல்மான் குர்ஷித் விளக்கம் அளித்துள்ளார். ராமர் பாதையில் ராகுல் செல்கிறார் என்ற அர்த்தத்தில் தான் தாம் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். 


Tags : Rahul Gandhi ,Rama ,Congress ,Salman Khurshid , Delhi, Ram, Salman Khurshid, rebuttal
× RELATED பரபரப்பாக தேர்தல் முடிவுகள்...