பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ 1000 பணம், பச்சரிசி மற்றும் சர்க்கரையுடன் முழு கரும்பும் வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை : பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ 1000 பணம், பச்சரிசி மற்றும் சர்க்கரையுடன் முழு கரும்பும் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விவசாயிகள் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து தர முதல்வர் உத்தரவு அளித்துள்ளார். 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சக்கரை, ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் முழுக்கரும்பையும் வழங்க முதல்வர் உத்தரவு அளித்துள்ளார். பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை ஜனவரி 9ம் தேதி சென்னையில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

Related Stories: