×

பெலகாவியை மராட்டியத்துடன் இணைக்க பேரவையில் தீர்மானம்: மராட்டிய அரசின் செயலுக்கு கர்நாடக முதலமைச்சர் கண்டனம்..!!

கர்நாடகா: கர்நாடகத்தில் மராட்டிய மக்கள் அதிகம் வசிக்கும் 865 கிராமங்களை தங்கள் மாநிலத்துடன் சேர்க்க வலியுறுத்தி மராட்டிய சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் மராட்டிய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இந்த மாவட்டத்தை பல ஆண்டுகளாக மராட்டிய மாநிலம் சொந்தம் கொண்டாடி வருவதால் பிணக்கு நீடிக்கிறது.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எல்லை விவகாரம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு முன்பு இரு மாநில எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இதனால் இரண்டு மாநில முதலமைச்சர்களிடமும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தி பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். இந்த நிலையில் பெலகாவை உள்ளடக்கிய 865 கிராமங்களை தங்கள் கிராமங்களுடன் சேர்க்க வலியுறுத்தி மராட்டிய மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் ஒரு அங்குல நிலத்தை கூட விட்டுத்தர முடியாது என்று கர்நாடக முதலமைச்சர்.பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். வழக்கு நிலுவையில் இருக்கும் போது இதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார். இதனிடையே வழக்கில் தீர்ப்பு வரும் வரை சர்சைக்குரிய பகுதிகளை இணைத்து யூனியன் பிரதேசமாக இணைக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே யோசனை தெரிவித்துள்ளார். 


Tags : Belagavi ,Maharashtra ,Karnataka ,Chief Minister ,Maharashtra government , Karnataka, Maratha, Resolution, Condemnation
× RELATED நவாப்கள், நிஜாம்களுக்கு எதிராக ராகுல் பேசாதது ஏன்? பிரதமர் மோடி தாக்கு