பண்ருட்டி பகுதியில் காலி பிளவர் பயிரிட விவசாயிகள் ஆர்வம்

பண்ருட்டி : பண்ருட்டி அருகே கட்டமுத்துபாளையம், பூண்டி, கண்டரக்கோட்டை, புதுப்பேட்டை, பெரியகள்ளிப்பட்டு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் அதிக அளவில் காலி பிளவர் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.பனிக்காலத்தில் விளையக்கூடிய இந்த பயிரானது ஊட்டி, ஓசூர், பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் விளைவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இப்பகுதிகளில் விவசாயிகள் ஆர்முடன் பயிர் செய்து வருகின்றனர்.

சுமார் 90 நாட்கள், அதாவது மூன்று மாத பயிரான இவை பனிக்காலத்தில் கூடுதல் மகசூல் தரக்கூடியது. அவை தற்போது நன்கு செழித்து வளர்ந்து பூக்கள் வைக்கும் தருவாயில் உள்ளது. இவை கார்த்திகை மாதத்திற்கு முன் பயிர் செய்து தை மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். குறுகிய கால பயிரான இவற்றை விவசாயிகள் அதிக அளவில் ஆர்வமுடன் பயிர் செய்து வருகின்றனர்.

Related Stories: