×

அவிநாசி ஒன்றியத்தில் அசுவினி பூச்சு, கோமாரி நோய்கள் பரவலால் கால்நடைகள் பாதிப்பு: உடனடியாக கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க அரசிடம் கோரிக்கை

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில் நோய் தாக்குதலுக்குள்ளாகி இருக்கும் கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவிநாசி ஒன்றியத்தில் உள்ள ராயம்பாளையம், சின்னேரிபாளையம், நடுவச்சேரி, தெக்கலூர், புதுப்பாளையம் உள்ளிட்ட 31 ஊராட்சிகளில் ஏராளமானோர் வாழ்வாதாரத்திற்காக கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். சமீபகாலமாக கறவை மாடுகள் மற்றும் கன்றுக்குட்டிகள் அசுவினி பூச்சு, கோமாரி, அம்மை கொப்பளம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளன. மாடுகள் தீவனம் எடுக்காமல், தண்ணீர் குடிக்காமல் சோர்ந்துள்ளன.

நாட்டு வைத்திய முறைகள் பலன் அளிக்காததால் அரசு கால்நடை மருத்துவமனைகளை நாடியுள்ளனர். அங்கும் குணப்படுத்த முடியாத சூழலில் தனியார் மருத்துவமனைகளை தேடி அலைந்து வருகின்றனர். நோய் முற்றி கால்நடைகள் உயிரிழக்கும் பட்சத்தில் தங்களில் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். உடனடியாக அவிநாசி ஒன்றியத்தில் கால்நடை மருத்துவர்கள் முகாமிட்டு போர்கால அடிப்படையில் உரிய சிகிச்சை அளித்து மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மாதம் ஒருமுறை கால்நடைகளை பரிசோதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


Tags : Avinasi Union , Avinasi, aphid coating, leprosy, disease, livestock, government, request
× RELATED அவிநாசி அருகே ஒழுங்குமுறை விற்பனைக்...