×

புத்தாண்டு கொண்டாட்டங்கள், விழாக்களின் போது தனிமனித இடைவெளி, முகக் கவசம் அணிய வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

சென்னை: சீனாவிலிருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து தென்கொரியா, இலங்கை வழியாக மதுரை வந்த 36 வயது பெண், அவரது குழந்தைக்கு தொற்று உறுதியான நிலையில் தாய், மகள் இருவரும் நலமுடன் இருக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், சீனாவில் இருந்து மதுரை வந்த 2 பேருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், 2 பேருக்கு ஏற்பட்டுள்ளது எந்த வகை கொரோனா தொற்று என ஆய்வு செய்ய மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது முகக்கவசம் அணிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிவது, கிருமிநாசினியை மக்கள் பயன்படுத்த வேண்டும். மேலும், புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் சுய கட்டுப்பாடுகளுடன் கொண்டாடுவது நல்லது என அவர் அறிவுறுத்தியுள்ளார். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் ஆய்வு செய்ய உள்ளேன். சீனா, தைவான் உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருவோருக்கு பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசியை தமிழகத்திற்கு வழங்கிட மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : New Year ,Minister ,M. Subramanian , new year, individual, gap, face, armor, minister, request
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!