பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தாம்பரம்- நெல்லை இடையே (06201 ,06057) சிறப்பு கட்டண ரயில் வரும் 12,16 ஆகிய தேதிகளில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9, 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும். அதேபோன்று மறுமார்க்கமாக நெல்லை- சென்னை எழும்பூர் இடையே (06022, 06058) சிறப்பு ரயில் வரும் 13, 17 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1 மணி மற்றும் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.20 மற்றும் 9.20 மணிக்கு சென்னை வந்தடையும்.

தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் (06041) வரும் 13ம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக நாகர்கோவில் - தாம்பரம் (06042) பொங்கல் சிறப்பு ரயில்

16ம் தேதி மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு மறுநாள் காலை 7.30 மணிக்கு வந்தடையும். மேலும் கொச்சிவேலி-தாம்பரம் இடையே (06044) சிறப்பு ரயில் வரும் 17ம் தேதி காலை 11.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் ரயில்நிலையத்திற்கு வந்தடையும்.

தாம்பரம்- கொச்சிவேலி இடையே (06043) சிறப்பு ரயில் 18ம் தேதி காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.20 மணிக்கு கொச்சிவேலி சென்றடையும். எர்ணாகுளம்- சென்னை சென்ட்ரல் இடையே (06046) சிறப்பு ரயில் வரும் 12ம் தேதி இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு வந்தடையும். சென்னை சென்ட்ரல்- எர்ணாகுளம் இடையே (06045) சிறப்பு ரயில் 13ம் தேதி மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 3.10 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: