கோயிலில் சாமி சிலை உடைப்பு

காடையாம்பட்டி: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள மகுடேஸ்வரர் கோயிலில் 5 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது, சிவன் மற்றும் நந்தி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சமூக விரோதிகள் சிலர் கோயிலின் இரும்பு கேட்டை உடைத்து உள்ளே சென்று சிவன் சிலை மற்றும் நந்தி சிலையை கடப்பாரையால் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் நந்தி சிலையை 100 மீட்டர் தூரத்திற்கு அப்பால் போட்டு விட்டு சென்றுள்ளனர். நேற்று காலை தரிசனம் செய்ய வந்த பூசாரி மற்றும் நிர்வாகிகள் பார்த்து தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். உடைக்கப்பட்ட சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்து பிரதிஷ்டை செய்யும் பணி நடக்கிறது.

Related Stories: