×

திருச்சி ஏர்போர்ட்டில் 6 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி: சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு நேற்றுமுன்தினம் ஏர்இந்தியா விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளிடம் வான்நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.  இதில், 6 பேரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களை தனியாக அழைத்துச்சென்று சோதனை செய்தனர். இந்த 6 பேரும் வீட்டு உபயோக பொருட்களில் மறைத்து 6 கிலோ தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3 கோடி. இதுதொடர்பாக 6 பேரிடமும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது விமான நிலைய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post திருச்சி ஏர்போர்ட்டில் 6 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Trichy Airboard ,Trichy ,AirIndia ,Charjah ,Dinakaran ,
× RELATED மகன் இறந்த வேதனை தந்தை தற்கொலை