பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வடசென்னை அனல்மின் நிலைய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள, நுழைவாயிலில் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய  ஒப்பந்த தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மின் வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும், 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும், மின்வாரிய ஊழியர்களின் 23 சலுகைகளை பறிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள வாரிய ஆணை 2ஐ ரத்து செய்ய வேண்டும், அனல் மின் நிலையத்தில் ஊக்கத்தொகை, வழங்க வேண்டும்,

தடை செய்யப்பட்ட இடங்களில் ஒப்பந்த முறையினை புகுத்த கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், தமிழ்நாடு அரசு உடனே தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால், ஜனவரி 10ம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

Related Stories: