×

தாம்பரம் மேயர் குழந்தைக்கு பெயர் சூட்டினார் முதல்வர்

தாம்பரம்: மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் நடந்த இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாட்டை துவக்கி வைக்க வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்லாவரம் தொகுதி திமுக சார்பில் குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி தலைமையில், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, பகுதி திமுக செயலாளர் திருநீர்மலை ஜெயக்குமார், கருணாகரன், பெர்னாட், செம்பாக்கம் இரா.சுரேஷ், மாடம்பாக்கம் நடராஜன், ஆர்.எஸ்.சங்கர், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை மனோகரன் உள்பட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதேபோல தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் தாம்பரம் ரயில் நிலைய நுழைவாயில் அருகில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில் மண்டல குழு தலைவர் டி.காமராஜ், ஜோதி குமார், ஜா.ரவி, சிட்லபாக்கம் சுரேஷ், வேல்மணி, கருணாகரன் உள்பட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சி முடிந்து செல்லும்போது தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரிக்கு கடந்த செப்டம்பர் 21ம் தேதி பிறந்த ஆண் குழந்தையை முதல்வர் தனது கைகளால் பெற்று வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்ந்து குழந்தைக்கு ‘திராவிட அரசன்’ என பெயர் சூட்டினார். அப்போது, மேயர் வசந்தகுமாரி, அவரது கணவர் கோகுல் செல்வன், டி.ஆர்.பாலு எம்.பி, அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்எல்ஏக்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, ரூபி மனோகரன், துணை மேயர் கோ.காமராஜ் உடனிருந்தனர்.


Tags : Chief Minister ,Tambaram Mayor , The Chief Minister named the child after Tambaram Mayor
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...